×

அம்பேத்கர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்: விலங்குகளை பாதுகாப்பது குறித்து விளக்கம்

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில், 2 நாள் தேசிய அளவிலான பல்லுயிர் வளம் மற்றும்  பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். துறை தலைவர் குமரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வளத்துறை முன்னாள் முதல்வர் கதிரேசன், ஒருங்கிணைப்பாளர்  சரவணன், திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கடல்வாழ் உயிரினம், வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து விளக்கி பேசினர். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள்,  மாணவர்கள் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : National Amateur Seminar , Ambedkar College, National Level, Seminar
× RELATED நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட...