×

இன்ஸ்பெக்டர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி உதவி கமிஷனர் அலுவலகம் முற்றுகை

ஆலந்தூர்: சிவில் வழக்குகளில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிண்டி உதவி கமிஷனர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் என முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவராக இருப்பவர் லிங்கபெருமாள். இவர் நேற்று பிற்பகலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் திரண்டு ஊர்வலமாக வந்து கிண்டி போலீஸ் உதவி கமிஷனர்  அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போலீசார் லிங்கபெருமாளை சமாதானப்படுத்தி பொதுமக்களை கலைந்து செல்ல சொல்லி விட்டு அவரை மட்டும் உதவி கமிஷனர் சுப்புராயன் இடம் அழைத்துச்சென்றார்.

அப்போது லிங்கபெருமாள் ஒரு மனுவினை  உதவி கமிஷனரிடம் கொடுத்தார். அதில் வேளச்சேரி சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவின், கடைகளை வாடகைக்கு விடுதல், லீசுக்கு விடுதல் போன்ற சிவில் வழக்குகளில்  தலையிடுகிறார். கடை உரிமையாளர்களுக்கு கொடுக்கும் பணத்தினை ரொக்கமாக தன்னிடம் தான் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார். மேலும் வேளச்சேரியில் சிறுகடை நடத்தும் வியாபாரிகளை தொழில் செய்ய விடாமல் தொல்லை செய்வதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்த புகாரில் கூறி இருந்தார்.  புகாரை பெற்ற உதவி கமிஷனர்  நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assistant Commissioner ,Office Siege ,inspector , Inspector, Assistant ,Commissioner's, Siege
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...