×

பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் நாளை நடை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்தர திருவிழா விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நாளை மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுேதவன் நம்பூதிரி நடை திறப்பார். நாளை வேறு பூஜைகள் நடக்காது. நாளை நடை திறந்த பின்னர் தங்க கதவு பொருத்தும் பணிகள் நடக்கும். நாளை மறுநாள் காலை 7.30 மணியளவில் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கொடியேற்றுகிறார். அன்று முதல் 21ம் தேதிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தினமும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 10 மணிவரை நெய்யபிஷேகம் நடக்கும். 9ம் நாள் விழாவான 20ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி பம்பையில் ஆறாட்டு நடக்கும். 21ம் தேதியுடன் திருவிழா நிறைவடையும். அன்று இரவு கோயில் நடை சாத்தப்படும். திருவிழாவின்போதும் இளம் பெண்கள் சபரிமலை வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு பிறகு நிலைக்கலில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Sabarimala , Day festival ,Sabarimala
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...