×

தட்டிக்கேட்போம்னுதான் பிரேமலதா கூறுகிறார் தேமுதிக ஒண்ணும் விமர்சனம் செய்யலையே... : முதல்வர் எடப்பாடி பழனிசாமி சப்பைக்கட்டு

ஓமலூர்: தேமுதிக ஒண்ணும் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை, ஊடகங்கள் மட்டுமே அப்படி பேசுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து புறநகர், மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் ேபசியதாவது:  அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. இந்த கூட்டணி பால் ேபான்றது. இதில் விஷம் கலக்க ேவண்டும் என்று விஷமிகள் திட்டமிட்டுள்ளனர். ஒரு துளி விஷம் கலந்தால் கூட, தூய பாலின் தன்மை கெட்டுவிடும். எனவே நாம் அனைவரும் இதை உணர்ந்து, எந்த விஷமத்தனங்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி:  தேமுதிகவுடன் நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அதேபோல், அவர்களுக்கும் சில நிலைப்பாடுகள் இருக்கும். அதிமுகவை ேதமுதிக விமர்சனம் செய்ததாக ஊடகங்கள் மட்டுமே பேசுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். கூட்டணிக்குள் வரும்போது ஒருமித்த கருத்து ஏற்படும்.எதிர்க்கட்சியாக இருக்கும்போது தட்டிக்கேட்போம். நல்லது செய்தால் வரவேற்போம் என்று தான் பிரேமலதா கூறியுள்ளார். யார் பிரதமராக வந்தால் சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திரமோடியை ஆதரிக்கிறோம் என்றார்.

அதிமுகவில் கே.சி.பழனிசாமி இணைந்தாரா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கே.சி. பழனிசாமி தலைமை செயலகத்தில் என்னை சந்தித்து கட்சியில் இணைந்தார் என்று சொல்வது பொய்ப்புகார். அவர் அதிமுகவில் இணைந்தார் என்று நாங்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் ஒரு முன்னாள் எம்பி என்ற முறையில், தனது கோரிக்கைகள் குறித்து முறையிடவே என்னை வந்து சந்தித்தார். எதிர்க்கட்சி தலைவர் கூட, இது போல் என்னை சந்தித்துள்ளார். பொதுமக்களாக இருந்தாலும், ேகாரிக்கையோடு முதல்வரை சந்திக்க உரிமையுள்ளது.  7 பேர் விடுதலையில், எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த பிரச்னையை அரசியலாக்குவது தேர்தலுக்கான நாடகம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pramalatha ,Edappadi Palanisamy , Premalatha says, Chief Minister Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்