×

ராணுவ தொப்பி அணிந்து விளையாடி அரசியலாக்கிய இந்தியாவை ஐசிசி கண்டிக்க வேண்டும்: பாகிஸ்தான் அமைச்சர் கோரிக்கை

இஸ்லாமாபாத்: ராணுவ வீரர்களின் தொப்பி அணிந்து விளையாடி ஜென்டில்மேன் விளையாட்டை  அரசியலாக்கிவிட்ட இந்தியா அணியை ஐசிசி கண்டிக்க வேண்டும்’ என்றும், ‘அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றும்   பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். புல்வாமாவில் நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவப் படையினர்  கொல்லப்பட்டனர். அதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும், உலக கோப்பையில் பாகிஸ்தானை விலக்க வேண்டும், பாகிஸ்தானுடன் விளையாடாமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன. இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியமும்(பிசிசிஐ) வலியுறுத்தியதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நிராகரித்து விட்டது.

இந்நிலையில் புல்வாமா சம்பவம் காரணமாக ஐபில் தொடக்க விழாவில் பிரமாண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. ‘அதற்கு செலவிட இருந்த தொகையை புல்வாமா தாக்குதலில் உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ’ என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ராஞ்சியில் நேற்று முன்தினம் 3வது ஒருநாள் போட்டி நடைப்பெற்றது. பிசிசிஐ உத்தரவுப்படி புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ராணுவத்தினர் அணியும் தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். இதற்கு இந்தியாவில் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில்   பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் உசைன் சவுத்ரியும் அவர்களின் ஒருவர். இது குறித்து ஃபவாத் சவுத்ரி, ‘ ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டை இந்தியா அணி அரசியலாக்கி விட்டது.  ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை பாகிஸ்தான்  கிரிக்கெட் வாரியம்(பிசிபி) உடனடியாக ஐசிசியிடம் வலியிறுத்த வேண்டும்.இந்தியா அணி இப்படி தொடர்ந்து ராணுவ தொப்பி அணிந்து விளையாடினால் ‘காஷ்மீர் பிரச்னையை உணர்த்தும் வகையில், பாகிஸ்தான் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC ,India ,Minister ,Pakistan , Army cap, politics, India, ICC, Pakistan
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு