×

மின்சார மாடலாக மாறும் போர்ஷே மெகான்

சொகுசு கார்களில் போர்ஷே நிறுவனத்தின் மெகான் எஸ்யூவி ரக கார், உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக உள்ளது. தனித்துவமான டிசைன் அம்சங்கள் மற்றும் சிறப்பான திறன் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 86,000 போர்ஷே மெகான் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. சொகுசு கார் மார்க்கெட்டில் ஓர் சிறந்த தேர்வாகவும், போட்டியாளர்களுக்கு சவாலான மாடலாகவும் இந்த கார் உள்ளது.  இச்சூழலில், அடுத்த தலைமுறை மெகான் காரை முழுவதும் மின்சார மாடலாக அறிமுகம் செய்ய போர்ஷே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்புதிய தலைமுறை போர்ஷே மெகான் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. இதுபற்றி போர்ஷே நிறுவன உயர் அதிகாரி ஒலிவர் புளூம் கூறுகையில், “மின்சார வாகன துறையுடன் போர்ஷே இணைந்து செயலாற்றி வருகிறது. வரும் 2022ம் ஆண்டில் 6 மில்லியன் யூரோக்களை, மின்சார வாகன உருவாக்கத்திற்காக முதலீடு செய்ய இருக்கிறோம்.

வரும் 2025ம் ஆண்டில் எங்களது 50% வாகனங்களை, மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிட்டிருக்கிறோம்” என்றார். இதனிடையே, மெகான் காரை முழுவதுமாக மின்சார மாடலாக களமிறக்கும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரிமீயம் பிளாட்பார்ம் எலெக்ட்ரிக் (PPE) என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில்தான் இப்புதிய மெகான் உருவாக்கப்படுகிறது. இந்த பிபிஇ என்ற புதிய கட்டமைப்பு கொள்கையானது, போக்ஸ்வேகன் குழுமத்தின்கீழ் செயல்படும் ஆடி மற்றும் போர்ஷே ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. போர்ஷே நிறுவனத்தின் டைகன் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் 800 வோல்ட் சார்ஜிங் சிஸ்டம்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வெறும் 20 நிமிடங்களில் காரின் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிவிட முடியும். இப்புதிய மின்சார மாடல் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Porsche ,Megan , Porsche Megan
× RELATED சில்லி பாய்ன்ட்…