×

அசத்துறாங்கப்பா... இந்த ஊரு விவசாயிகள்.. தண்ணீரை சேமிக்க தார்பாய் கிணறு

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரை தார்பாய் கிணறு மூலம் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி அசத்தி வருகின்றனர்.பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, அய்யங்கோட்டை, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா உள்ளிட்ட விவசாய பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதி மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விரைவில் வறளும் சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் விவசாய தோட்டங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளில் நீர் ஊற்று என்பது அடியோடு நின்று விட்டது. இதனால் 100 அடி முதல் 125 அடி வரை உள்ள திறந்தவெளி கிணறுகள் காட்சிப்பொருளாக உள்ளன. ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரையே சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆழ்துளை கிணறுகள் வறண்ட நிலையில் உள்ளதால் தண்ணீரை வேகமாக உறிஞ்சி ஆரம்பிக்கின்றன. இதனால் கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரும் எட்டாக்கனியாக மாறி வருகிறது.

 இந்நிலையை தடுக்கும் பொருட்டு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் செலவில் தார்ப்பாய் கிணறுகள் அமைத்து தண்ணீரை சேமித்த விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 அடி முதல் 25 அடி வரை குளம் போன்ற அமைப்பில் பள்ளம் தோண்டி அதில் தார்பாய்களை விரித்து விடுகின்றனர். பின்னர் அதில் ஆழ்குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்த பின் இதை மோட்டார் மூலம் உறிஞ்சி தென்னை, மா உள்ளிட்ட மரங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து கிடைக்கும் குறைந்தளவு தண்ணீர் வீணாகாமல் போவதை தடுக்க இம்முறையை கையாண்டு வருகிறோம். இதன்மூலம் போதியளவு தண்ணீர் பாய்ச்சி தென்னை, மா மரங்களை காப்பாற்றி வருகிறோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pattiveeranpatti ,Dharbai well ,water farmers idea
× RELATED தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல்...