×

புதிய இணைப்பு தர லஞ்சம் மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பிடிபட்டனர்

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் குமார் (40). ரியல் எஸ்டேட் புரோமோட்டர்ஸ். இவர் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு பூலாங்குடியில் ராஜேஷ் என்பவருக்கு விற்பதற்காக புதிதாக கட்டிய ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, அரியமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் இணைப்பு வழங்க உதவி செயற்பொறியாளர் பாலசந்தர்(45), வணிக பிரிவு ஆய்வாளர் வீரசரவண பெருமாள் (47) ஆகியோர் 20,000 லஞ்சம் கேட்டுள்ளனர். புகாரின்படி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் தந்த ரசாயன பவுடர் தடவிய  20,000த்தை உதவி செயற்பொறியாளர் பாலசந்தர், வணிக ஆய்வாளர் வீரசரவண பெருமாளிடம் நேற்று குமார் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக இருவரையும் பிடித்தனர். அலுவலகத்தை பூட்டி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : two ,bidder , two were arrested, including a bidder, a power supply bribe
× RELATED பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது