×

சமாஜ்வாடி முதல் வேட்பாளர் பட்டியல் மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் போட்டி

லக்னோ: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ கூட்டணி 73 இடங்களில் வென்றது. தற்போது பாஜ.வை  வீழ்த்தும் திட்டத்துடன் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், சமாஜ்வாடி தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில், சமாஜ்வாடியின் செல்வாக்கு மிக்க, பாதுகாப்பான தொகுதியாக கருதப்படும் மெயின்புரியில், கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதாவுன் தொகுதியில் தர்மேந்திர யாதவும், பிரோசாபாத்தில் அக்‌ஷய் யாதவும் போட்டியிடுகின்றனர். முலாயம் 1996, 2004, 2009 மக்களவைத் தேர்தல்களில் மெயின்புரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மெயின்புரி, அசாம்கர்க் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்..


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi ,Mulayam Singh ,constituency ,Mainpuri ,contest , Samajwadi Party, candidate, Maidanpuri, Mulayam Singh
× RELATED பி.எஸ்.பி போட்டி வேட்பாளருக்கு போலி ஆவணம் தயாரித்த சமாஜ்வாடி வேட்பாளர்