×

மாதம் 7.59 லட்சம் சம்பளத்துடன் சவுதியில் அரசு டாக்டர் பணி: விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனீல் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு:சவுதி அரேபிய அமைச்சகத்தின், அல் காசிமிலுள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்கு உட்பட்ட ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை டெல்லியிலும், 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை பெங்களுருவிலும் நடைபெற உள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப 1.84 லட்சம் முதல் 5.09 லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 2.42 லட்சம் முதல் 7.59 லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இதுதவிர, இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ள மருத்துவர்கள் ovemcldr2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 8ம் தேதிக்குள் (இன்று) சுயவிவரங்களை அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com அல்லது 22505886, 22502267, 82206 34389, 95662 39685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saudai ,Government , Saudi, government doctor's work, last day
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை