×

கைத்தறி மூலம் ேபார்வை நெய்ததாக கூட்டுறவு சங்கங்கள் கோடிக்கணக்கில் முறைகேடு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

* சிறப்பு செய்தி
கைத்தறி மூலம் ேபார்வை நெய்ததாக கோடிக்கணக்கில் கூட்டுறவு சங்கங்கள் கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 1139 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.44 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில், 1053 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும்  86 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர், ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கைத்தறி துணி உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் கைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தான் முன்னுரிமை அடிப்படையில் போர்வை, ஜமுக்காளம் கொள்முதல் செய்ய ஆர்டர் வழங்கப்படுகிறது. குறிப்பாக, சேலை, வேட்டி, ஜமுக்காளம், பெட்ஷீட். கம்பளி, மப்ளர் உட்பட 11 ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், 75 சதவீதம் வரை கைத்தறி நெசவாளர்களுக்கு போர்வை, ஜமுக்காளம் கொள்முதல் ஆர்டர் தரப்படுகிறது.
இதில், கைத்தறி நெசவாளர்கள் மூலம் நெய்யப்படும் ஒரு போர்வைக்கு ரூ.110 கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விசைத்தறி மூலம் நெய்து தரப்படும் ஒரு போர்வைக்கு ரூ.30 முதல் ரூ.35 மட்டுமே கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைத்தறி மூலம் ஆண்டுக்கு 1 கோடி பல ரகங்கள் கொண்ட போர்வைகள் வரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் போர்வைகளில் கூட முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, விசைத்தறி மூலம் ஒரு போர்வை நெய்யப்பட்டு, கைத்தறி மூலம் நெய்யப்பட்டதாக கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது. அந்த, பணம் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி ெதாழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக கணக்கு காட்டப்பட்டு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் சுருட்டுவதாக தெரிகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கிலான பணம் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கைத்தறி துணி நூல்துறை இயக்குனர் அலுவலகம், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பங்கு பிரித்து தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: கைத்தறி நெசவாளர்கள் மூலம் நெய்யப்படும் போர்வைகளுக்கு கூடுதலாக கூலி தரப்படுகிறது.

இதனால், சமீபகாலமாக விசைத்தறி நெசவாளர்கள் மூலம் நெய்யப்பட்ட போர்வையை கூட கைத்தறி மூலம் நெய்யப்பட்டதாக கணக்கு காட்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான போர்வை விசைத்தறி மூலம் நெய்யப்பட்டு, கைத்தறி மூலம் நெய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு போர்வையில் 4ல் 3 மடங்கு தொகையை அதிகாரிகள் சுருட்டி விடுகின்றனர். அவர்கள், கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தந்ததாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது. இதுபோன்று மோசடியாக போர்வை நெய்வதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் கைத்தறித்துறை சார்பில் அமலாக்கப்பிரிவு ஒன்று உள்ளது. அந்த பிரிவுதான் கைத்தறி மூலம் இந்த போர்வை நெய்யப்படுகிறதா என்று அவ்வ போது ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இந்த பிரிவு அவ்வாறு ஆய்வு செய்வதில்லை. இதை பயன்படுத்தி கொண்டு கூட்டுறவு சங்கங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வங்கி கணக்கில் கூலி செலுத்தும் திட்டம் என்னவானது?
கைத்தறி நெசவாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அவ்வாறு வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டம் தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தற்போது வரை முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது.

படுக்கை விரிப்புகளிலும் முறைகேடு
கைத்தறி நெசவாளர்கள் மூலம் படுக்கை விரிப்புகள் நெய்ததாக கூறி விசைத்தறிகள் மூலம் நெய்து, அதற்கான கூலியையும் கூட்டுறவு சங்கங்கள் கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது, படுக்கை விரிப்பை நெய்ய ஒரு படுக்கை விரிப்பிற்கு ரூ.55 வரை கூலி தரப்படும் நிலையில், அதை அப்படியே கூட்டுறவு சங்கங்கள் தொழிலாளர்களுக்கு தந்ததாக கணக்குக்காட்டி சுருட்டி விடுவதாக தெரிகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Handloom, Co-operative Society,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடிகர்...