×

கேரளாவில் அதிரடிப்படையினரால் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை: தமிழக எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

கேரளா: வயநாடு அருகே வைத்திரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மாவோயிஸ்ட்டுகளுடன் கேரள அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.  இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு மாவாயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தனியார் ஓட்டலில் நேற்றிரவு மாவோயிஸ்ட்டுகள் சிலர் புகுந்தனர். தனியார் ஓட்டலில் இருந்த சிலரை சிறைபிடித்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தகவல் அறிந்து ஓட்டலுக்கு சென்ற கேரள அதிரடிப்படை மாவோயிஸ்ட்டுகளுடன் துப்பாக்கிச்சண்டை நடத்தியது. இன்று காலை முதல் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு மாவாயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்த 2 மாவோயிஸ்டுகள் ஓட்டலில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தால் தமிழக எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சோதனைச்சாவடி, வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoist ,Kerala ,STF ,border ,Tamil Nadu , Kerala, Action Force, Maoist, shot dead
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்