×

டிரம்ப் எச்சரித்தாலும் ஒபெக் நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் குறையும்: பெட்ரோல் விலை தொடர்ந்து உயரும் அபாயம்

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 4 ஆண்டில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. வரும் மாதங்களிலும் உற்பத்தி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், எண்ணெய் வள நாடுகளின் வருவாய் பாதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என ஒபெக் நாடுகள் முடிவு செய்தன. ஒபெக் அமைப்பில் இல்லாத நாடுகள் சிலவும் இதற்கு ஆதரவு அளித்தன.

  கடந்த ஜனவரி 1ம் தேதி இந்த உற்பத்தி குறைப்பு தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 3,00,000 லட்சம் பேரல் வீதம் குறைக்கப்பட்டது.  கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒபகெ் நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 30.68 மில்லியன் பேரல். இது கடந்த 2015ம் ஆண்டில் உள்பத்தி செய்யப்பட்டதை விட குறைவு என ராய்டர் சர்வே தெரிவிக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 30.98 மில்லியன் பேரல் வீதம் உற்பத்தி செய்யப்பட்டது.   கடந்த டிசம்பரில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் கீழ் குறைந்தது.  தற்போது பேரல் 66 டாலருக்கு மேல் உயர்ந்து விட்டது. ஒபெக் மற்றும் ரஷ்யா, ஒபெக் சாராத எண்ணெய் வள நாடுகளின் உற்பத்தி குறைப்பு நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல். இதில் ஒபெக் நாடுகளின் பங்களிப்பு 8 லட்சம் பேரல். கடந்த பிப்ரவரியில் ஒபெக் நாடுகள் தங்கள் உற்பத்தி குறைப்பு இலக்கை 101 சதவீதம் பூர்த்தி செய்து விட்டன. அதாவது இலக்கை விட அதிகமாகவே குறைத்து விட்டன. ஒபெக் அமைப்பில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வள நாடுகளான சவூதி அரேபியா, வெனின்சூலா நாடுகள் உற்பத்தியை குறைத்ததே இதற்கு மிக முக்கிய காரணம்.

 ஒபெக் நாடுகள் இவ்வாறு தங்கள் இஷ்டத்துக்கு உற்பத்தியை குறைப்பது உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இருப்பினும் இதையும் மீறி உற்பத்தி குறைப்பை திட்டமிட்டபடி கடைப்பிடிக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. ஏற்கெனவே ஒபெக் நாடுகள் உற்பத்தியை குறைத்த கடந்த ஜனவரியில் இருந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது. ஒபெக் நாடுகளின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் 75.02க்கும், டீசல் 71.49க்கும் விற்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : countries ,OECD , Crude oil, petrol, price rise
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...