×

பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை மண்டைக்காடுக்கு இருமுடி கட்டி வந்த பெண் பக்தர்கள்

குளச்சல்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு பெண் பக்தர்கள் இரு முடிகட்டி வந்து வழிபட்டனர்.குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரளாவில் இருந்து அதிக அளவில் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர். ஆகவே இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடைவிழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி கொடைவிழா கடந்த 3ம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு திடலில் தினமும் ஆன்மீக பேருரை நிகழ்ச்சிகள், பக்தி பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

நேற்று 3ம் நாள் கொடையை முன்னிட்டு காலை மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், மதியம் உச்ச பூஜை நடந்தது. கேரள மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில்  குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மாலை மற்றும் இரவு வேளையில் கேரளாவில் இருந்து அதிகமான பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபட்டனர்.4ம் நாள் விழாவான இன்று 5 மணிக்கு  பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30க்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நண்பகல் வெட்டுமடை இசக்கியம்மன் கோயிலில் இருந்து சந்தனக்குடம் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்ச பூஜை நடந்தது. மாலை  கொத்தனார்விளை விடாலமுத்து சிவன் கோயிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் கொண்டு செல்லுதல் நடக்கிறது. 6.30க்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30க்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில்  எழுந்தருளல் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple devotees ,Bhagavadyamman ,murugan , Bhagavadyamman Temple, Maschidai, Mantiakadu, Duplex, lady devotees
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்