×

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் யாருக்கும் ஆளுமைதிறன் இல்லை: அன்வர் ராஜா அதிரடி பேட்டி

சென்னை: அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அன்வர் ராஜா கூறினார்.  தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்பி, செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: கடந்த 11 மாதங்களில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 103 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் வணிகவளாக கட்டிடத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் உள்ள ஹஜ்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல், உலாமாக்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். அப்துல்கலாம் பெயரில் கலைக்கல்லூரி கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முத்தலாக் சட்டத்தை மத்தியில் ஆளும் எந்த அரசு கொண்டு வந்தாலும் அதிமுக எதிர்க்கும் என்றார்.வாயை மூடு: அன்வர்ராஜா பேசும்போது, பத்திரிகையாளர்கள் பாஜவுடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அன்வர் ராஜா, பத்திரிகையாளர்களிடம் ‘வாயை மூடு’ என்று கூறியதுடன் அரசியல் குறித்து இங்கு பேசவேண்டாம். வெளியில் வந்து பேசுகிறேன் என்றார். அதன்படி, பத்திரிகையாளர்களின் வற்புறுத்தலின்பேரில் வக்பு வாரியத்தின் வெளிய வந்து மீண்டும் பேசியதாவது:  

அதிமுக தற்போது அமைத்துள்ள கூட்டணி தேர்தல் கூட்டணிதானே தவிர கொள்கை கூட்டணி கிடையாது. தேர்தலுக்குக்காக யாரும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்ட ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தற்போது அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்டவர்கள் யாரும் இல்லை. வக்பு வாரியத்துக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் ராமநாதபுரத்தில் நின்று பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,nobody ,Jayalalithaa ,Anwar Raja , Jayalalithaa's death, AIADMK, Anwar Raja
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...