×

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்ய உத்தரவு

அனைத்து  அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனை நிகழும் போது வீடியோ பதிவு செய்ய உத்தரவு. மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கான மூத்த தடவியல் நிபுணர் நேரில் ஆஜராகும்படி உயர்நிதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் அரவிந்த் சுவாமிநாதன் தொடுத்த இவ்வழக்கை உயநீதிமன்றம் மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பெயர், முகவரியை மட்டும் மாற்றி அறிக்கை தருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்கு உரிய மருத்துவர்கள் இல்லாததால் 700 அறிக்கைகள் கையொப்பமிடாமல் உள்ளன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மதுரை ராஜாஜிஅரசு மருத்துவமனை முதல்வரை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government hospital, post mortem, video recording, high court branch, order
× RELATED நெல்லை அருகே உகந்தாம்பட்டி விலக்கில்...