×

தேசப்பற்றின் சின்னமான அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் : ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை

ஜெய்ப்பூர் : பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபினந்தன் சிறைபிடிப்பு
 
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. இதனை விரட்டி சென்றபோது இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. பாராசூட் மூலமாக தப்பிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

அபிநந்தன் விடுவிப்பு


அவர் தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது. விமானியை விடுவிக்குமாறு இந்தியா அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். மேலும் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாகவும், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு முதல்கட்ட நடவடிக்கை இது என்றும் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தது. தற்போது டெல்லியில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜஸ்தான் பள்ளிக்கல்வித்துறை

இந்த நிலையில் அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படும் என்று ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் டோத்சரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக ராஜஸ்தானில் பள்ளி பாடத்திட்டங்களை மதிப்பாய்வு செய்ய இரண்டு குழுக்களை அமைச்சர் கோவிந்த் டோத்சரா அமைத்திருந்தார். மேலும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த் வீரர்கள் கதைகளையும் பாடப் புத்தகத்தில் சேர்க்குமாறு அமைச்சர் தெரிவித்து இருந்தார்.    

மக்களின் கதாநாயகனாக திகழும் அபிநந்தன்

கடந்த 27-ம் தேதி காஷ்மீர் எல்லையில் நடந்த வான்வெளி சண்டையில் பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அவரது விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அவர் மத்திய அரசின் முயற்சியால் கடந்த 1-ம் தேதி நாடு திரும்பினார். அமெரிக்காவின் நவீன ரக போர் விமானமான எப்-16 விமானத்தை உலகிலேயே முதன் முதலில் சுட்டு வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை அபிநந்தன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அபிநந்தனின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டும் வகை யில் நாடு முழுவதும் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தை களுக்கு அவரது பெயரை சூட்டி வருகின்றனர்.
மேலும் அவரை போலவே நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் அருவா மீசைக்கு மாறி வருகின்றனர். வடமாநிலங்களில் அபிநந்தன் உருவம் பொறித்த சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேசப்பற்றின் சின்னமாக, மக்களின் கதாநாயகனாக அபிநந்தன் உருவெடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : events ,Abhinandan ,Rajasthan School Education , Abhinandan, Liberation, Air Force Pakistan, Imran Khan, Rajasthan, School of Education
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை...