×

சானமாவு பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீர் தேடி அலையும் யானைகள் : தென்பெண்ணை ஆற்றில் முகாம்

ஓசூர்: ஓசூர் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், சானமாவு வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள், குடிநீர் தேவைக்காக அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு படையெடுத்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் காட்டு யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்காக நீர் நிலைகளை தேடி அலைகின்றன. தற்போது, ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் குடிநீர் தேடி, அருகில் ஓடும் தென்பெண்ணை ஆற்றுக்கு படையெடுத்து வருகின்றன.

இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் குடித்து அங்கேயே பகல் நேரத்தில் விளையாடி வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும்போது, வழக்கம் போல அருகிலுள்ள சானமாவு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. மீண்டும் இரவு நேரத்தில், தென்பெண்ணை ஆற்றுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனிடையே, யானைகளை காண அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். அதே நேரத்தில், யானைகள் நடமாட்டம் இருப்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை தடுக்க, வனப்பகுதிக்குள் யானைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dungeon area , Canamavu, drought, water, elephants
× RELATED சென்னையில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல்