×

500 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க மறுப்பு..... இந்தியா மீது பாகிஸ்தான் புகார்

லாகூர்: 500 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டதாக இந்தியா மீது பாகிஸ்தான் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவுக்கு வருகை தருவதற்கு பாகிஸ்தானை சேர்ந்த 500 பேருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டதாக பாகிஸ்தான்  மத விவகாரங்கள் துறை அமைச்சர் பீர் நூர் உல்  ஹக் காத்ரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேர், அஜ்மீர் தர்காவில் வழிபட வியாழக்கிழமை செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு இந்திய தூதரகம் விசா வழங்கவில்லை.  இது தொடர்பாக 500 பேருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வருவதற்கு கடந்த ஓராண்டில் 5,600 சீக்கிய பக்தர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், 312 இந்து பக்தர்களுக்கும் விசா வழங்கியுள்ளோம்” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,nationals , Pakistanis, Visa, India
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...