×

90 எம்எல் பட விவகாரம் ஓவியா மீது போலீசில் புகார்

சென்னை: தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் 90 எம்எல் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஓவியாவை கைது செய்ய கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணி தலைவர் ஆரிபா ரசாக் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகி உள்ள “90 எம்எல்” திரைப்படம்  தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. படத்தில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை தங்களது கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது, ஆபாச வசனங்கள் போன்றவை இப்படத்தில் அமைந்துள்ளது.

பாலியல் குற்றம் நடக்க 90 எம்எல் திரைப்படம் தூண்டும் வகையில் உள்ளது. குற்றவாளிகளை உருவாக்குவது இதுபோன்ற திரைப்படங்கள்தான் என்று இந்திய தேசிய லீக் கட்சி கருதுகிறது. எனவே, இந்த திரைப்படத்தை தடை செய்து, திரைப்படத்தில் நடித்துள்ள நடிகைகள் ஓவியா, ரிட்டா, பொம்மூ லட்சுமி, தாமரை, கோபிகா, பாரு, மசூம்  சங்கர், காஜர், மொஹிசா ராம், சுகன்யா மற்றும் இயக்குநர் அனிதா உதிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,Oviya , 90 ML movie complained, police over Oviya
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு