×

இந்தியா - பாக்.கில் மீண்டும் சம்ஜோதா சேவை துவக்கம்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜோதா ரயில் சேவை நேற்று மீண்டும் இரு நாடுகளிலும் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் ெகால்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து இரு நாட்டு விமானங்களும் எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்திக்கொண்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் பாகிஸ்தான் - இந்தியா இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜோதா ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை பாகிஸ்தானில் இருந்து சம்ஜோதா ரயில் புறப்படும். அதேபோல் டெல்லியில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சம்ஜோதா ரயில் பாகிஸ்தான் புறப்பட்டு செல்லும். இந்நிலையில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததால் சற்று பதற்றம் தணிந்தது. இதையடுத்து, சம்ஜோதா ரயில் சேவையை மீண்டும் தொடங்க இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கடந்த சனியன்று அறிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று  சம்ஜோதா ரயில் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியது. சுமார் 150 பயணிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் நாளை இந்தியாவில் இருந்து சம்ஜோதா ரயில் சேவை தொடங்கும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Pakistani , India, Samjhauta Service, Pakistan
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...