×

கிண்டியில் எஸ்.ஐ.,யை உல்லாசத்திற்கு அழைத்த புரோக்கர் கைது

ஆலந்தூர்: கிண்டியில் சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.கிண்டி பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து  அவரது  உத்தரவின் பேரில், கிண்டி காவல் நிலைய  சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் சாதாரண உடையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரகசியமாக கண்காணித்தார்.  அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், உல்லாசத்திற்கு தன்னிடம்  இளம்பெண்கள்  இருப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 2,500 என்றும் சப்-இன்பெக்டரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் அவருடன் சென்றார். கிண்டி மடுவின்கரை சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அழகியை அந்த வாலிபர் காண்பித்தார்.  பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு போலீஸ் நிலையத்திற்கு எஸ்.ஐ தகவல் கொடுத்தார். அதன்பேரில், பெண் போலீசார் அம்பிகேஸ்வரி, கிருத்திகா ஆகியோர், அங்கு சென்று  ஆந்திராவை சேர்ந்த அழகியை மீட்டு, பாலியல் தொழில் நடத்திய கேரளாவை சேர்ந்த புரோக்கர் பஷீர் (24) என்பவரை கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrest ,broker ,kundi , Guindy, SI, broker arrested
× RELATED டென்மார்க் பெண் பிரதமர் மீது தாக்குதல்: மர்ம நபரை கைது செய்தது போலீஸ்