×

சாதி கொடுமை நீங்க மரணத்தை விரும்பி ஏற்க தயார் : கி.வீரமணி பேச்சு

புதுச்சேரி: ஒருங்கிணைந்த எதிரிகளை வீழ்த்த தனித்தனியாக போர்க்களம் அமைக்காமல் ஒரு விரல் புரட்சி வழி சுலபமாக இருக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். புதுவையில் திராவிடர் கழக முன்னோடி சி.மு.சிவத்தின் நூற்றாண்டு மாநாடும் , திராவிடர் கழக மாநாடும் அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, சாதி கொடுமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தம்மை, சுட்டுக் கொன்றால் தான் சாதிக்கொடுமை நீங்கும் என்றால் அந்த மரணத்தை விரும்பி ஏற்க தயார் என தெரிவித்தார். சாதிப் பிரச்னைகள் ஒழியும் எனில், தன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்வதை ஏற்றுக்கொள்வேன் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். சாதியம் ஒழிய அனைவரும் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பேசுகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக சாடினார். கொள்கைக்காக கட்சிகள் இல்லை. பணம் சேர்க்கவே கட்சிகள் உள்ளதாக சாடினார். மக்கள்தான் மகத்தான சக்தி என்பதை மறந்து விட்டு சிலர் சந்தர்ப்பவாதமாக கூட்டணி அமைப்பதாக சாடினார். மாநாட்டில் பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் ஆண்களா அல்லது பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பாராட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : talks ,K.Veramani , K.Veramani, a finger revolution, death
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...