×

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக-தேமுதிக 3வது கட்ட ரகசிய பேச்சுவார்த்தை: இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து 3வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று ரகசியமாக நடைபெற்றது. இதையடுத்து இத்தனை நாட்களாக நடைபெற்ற இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 10 நாட்களாக அதிமுக – தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. காரணம், தேமுதிக கேட்ட மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுக தலைமை உறுதியாக மறுத்துவிட்டதுதான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அதிமுக தலைமை அழைத்துள்ளது. அதன்படி அதிமுக – தேமுதிக இடையே நேற்று மாலை ரகசியமாக தொலைபேசியில் பேச்சு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.வேலுமணி ஆகியோரும் தேமுதிக சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை விவரங்களை அதிமுக நிர்வாகிகள் கூறினர். பேச்சுவார்த்தை இரண்டு கட்சி தலைவர்களுக்கும் திருப்தி ஏற்பட்டால், இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

* பிரேமலதா மறுப்பு

இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ேநற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது. தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என கூறப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் அதிமுகவிடமும், பாஜகவிடமும் மாறி மாறி பேசி வருவதாகவும், ஒரு மாநிலங்களவை எம்பி சீட் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதனாலேயே பிரேமலதா இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.

 

The post நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக-தேமுதிக 3வது கட்ட ரகசிய பேச்சுவார்த்தை: இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : AIADMK-DMK ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...