×

மாவட்டம் விட்டு மாவட்டம் 934 பிடிஓக்கள் பணியிட மாற்றம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 934 பிடிஓக்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்து ஊரக வளர்ச்சி துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் கலெக்டர், தாசில்தார், போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சொந்த  மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.
 தமிழகம் முழுவதும் 1025 பிடிஓக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் பிடிஓக்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் பிடிஓக்களை வேறு  மாவட்டங்களுக்கு மாற்றி ஊரக வளர்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரத்தில் 34 பிடிஓக்கள், திருவள்ளூரில் 34 பிடிஓக்கள், கடலூர் 33 பிடிஓக்கள், விழுப்புரம் 50 பிடிஓக்கள், வேலூர் 48 பிடிஓக்கள், திருவண்ணாமலை 33 பிடிஓக்கள், சேலம் 37 பிடிஓக்கள், நாமக்கல் 38 பிடிஓக்கள்,  தர்மபுரி 21 பிடிஓக்கள், கிருஷ்ணகிரி 26 பிடிஓக்கள், ஈரோடு 32 பிடிஓக்கள், திருப்பூர் 31 பிடிஓக்கள், கோவை 29 பிடிஓக்கள், நீலகிரி 15 பிடிஓக்கள், தஞ்சாவூர் 34 பிடிஓக்கள், நாகப்பட்டினம் 29 பிடிஓக்கள், திருவாரூர் 28 பிடிஓக்கள்,  திருச்சி 32 பிடிஓக்கள், கரூர் 20 பிடிஓக்கள், பெரம்பலூர் 14 பிடிஓக்கள், அரியலூர் 17 பிடிஓக்கள், புதுக்கோட்டை 29 பிடிஓக்கள், மதுரை 29 பிடிஓக்கள், தேனி 22 பிடிஓக்கள், திண்டுக்கல் 36, ராமநாதபுரம் 26 பிடிஓக்கள், விருதுநகர் 23 பிடிஓக்கள், சிவகங்கை  31, திருநெல்வேலி 45 பிடிஓக்கள், தூத்துக்குடி 32, கன்னியாகுமரி 26 பிடிஓக்கள் என மொத்தம் 934 பிடிஓக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுங்களுக்கு சென்று பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,district ,elections ,Parliamentary , District,district, 934 BOTS, Workplace Change, Parliamentary Elections
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...