×

வாழ்வாதார பிரச்னைகளில் நியாயம் வழங்காத பாஜ-அதிமுக கூட்டணியை விவசாயிகள் ஏற்கவில்லை: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

நெல்லை:  தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல்-2019 பிரச்னைகளும், தீர்வுகளும் என்ற  தலைப்பில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் சந்திப்பு பிரசார பயணம் நடத்தப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை அருகே  இருந்து துவங்கிய பிரசார பயணக்குழுவினர்  நெல்லை வந்தனர். நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் பிரசாரம் செய்தனர். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து வந்துள்ளது.  கஜா புயல் பாதிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து ஏற்பட்ட போதும், தமிழகத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனை அதிமுகவை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையே கூறியிருக்கிறார்.

காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை போன்ற விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைகளில் தமிழகத்திற்கு நியாயம் வழங்காத பாஜ அரசுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. ரூ.6 ஆயிரம்  திட்டத்திலும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதனை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகளை சந்திக்கும் பரப்புரை பிரசாரத்தை மேற்கொண்டுள்ளோம்.  வருகிற 8ம் தேதி மாலை தஞ்சாவூரில் இந்த பரப்புரை பயணம் நிறைவு பெறுகிறது. அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தமிழக விவசாயிகளின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,BJP ,AI ,interview ,PRPandian , BJP-AIADMK , Farmers, PR Pandian
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...