×

ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசார் எங்கள் நாட்டில் இருக்கிறார்: பாக். அமைச்சர் குரேஷி தகவல்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மசூத் அசார் தலைமையில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து வருகிறது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் குரேஷி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ெஜய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருக்கிறார். தீவிரவாத தாக்குதல்கள் பற்றி மசூத் மீது உறுதியான, வலுவான ஆதாரங்களை இந்தியா கொடுத்து, அவை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அதுபோன்று ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் தாருங்கள். அப்போதுதான் எங்களால் மக்களை  நம்பவைக்க முடியும். பாகிஸ்தானின் சுதந்திரமான நீதித்துறையை நம்பவைக்க முடியும். சட்ட நடைமுறையை நாம் திருப்திப்படுத்த வேண்டும்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masood Azhar ,Qureshi ,Jaish-e-Mohammad ,country , Jaish-e-Mohammad commander, Masood Asar, Pak. Minister Qureshi
× RELATED நான் மாம்பழ ரேட்ட சொன்னேன்.. 400+ ஆஆ…175 கூட...