×

பயனாளிகள் அலைக்கழிப்பு நாட்டுக்கோழி, கூண்டுகளை கொண்டு செல்லமுடியாமல் திண்டாடிய மக்கள்

* ஆட்டோ, வேனுக்கு பல ஆயிரம் செலவு

விழுப்புரம் : புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நாட்டுக்கோழி, கூண்டுகளை கொண்டுசெல்ல முடியாமல் பொதுமக்கள் திண்டாடினர். சிலர் பைக்கில் கொண்டுசென்றபோது கோழிகள் கீழே விழுந்து இறந்தன. மேலும் ஆட்டோ, வேன் வாடகைக்கு செலவு செய்து அதனை வீட்டிற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் கோழி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வாழ்க்கை தரம் உயர்த்த புறக்கடை கோழிவளர்ப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.3,750 மதிப்பில் நான்குவார அசல் நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 மற்றும் கோழிக்கூண்டு அமைத்திட ரூ.2,500 வழங்கப்படும்.

மாவட்டந்தோறும் இதற்காக கால்நடைத்துறையின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டன. அந்தந்த கால்நடைத்துறை மருத்துவமனையில் விண்ணப்பங்களை அளித்து தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்க உள்ளதால் இங்கு வரவேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் நேற்று காலை முதல் நாட்டுக்கோழிக்காக பயனாளிகள் காத்துக்கிடந்தனர்.

alignment=


இதனிடையே ஒரு பயனாளிக்கு மட்டும் இதனை வழங்கி துவக்கிவைத்துவிட்டு அமைச்சர் சென்றுவிட்டார். ஆனால் கோழிக்கூண்டு, கோழிகளை கொண்டுசெல்ல முடியாமல் பயனாளிகள் திண்டாடினர். மொத்தம் ரூ.5,750 மதிப்புள்ள கோழி, கூண்டுகளை பெற்றுச்செல்ல அவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டது. ஆட்டோ, வேன் வாடகைக்கு வைத்து அதனை கொண்டு செல்லும் நிலைக்கு பயனாளிகள் தள்ளப்பட்டனர்.

சிலர் பைக்குகளில் கொண்டுசெல்லும்போது கோழிகள் சில பெட்டிகளிலிருந்து வெளியேறி கீழே  விழுந்தன. இதனை பார்த்த சிலர் அவர்களுக்கு உதவி செய்தனர். இதுபோன்று ஒரு சிலர் கோழிகளை கொண்டு செல்லும் போது அவைகள் வெளியேறி கீழே விழுந்த போது எதிர்பாராதவிதமாக இறந்தன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கை தரம் உயரத்தான் அரசு நாட்டுக்கோழிகளை வழங்கி அவர்களின் அன்றாட வாழ்விற்கு உதவிசெய்தது. ஆனால் அதில் பல ஆயிரம் செலவு செய்து கொண்டுசெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு பயனளிக்காமல் போனது. இது குறித்து பயனாளிகள் கூறுகையில், எங்களுக்கு அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் வழங்கினால் எளிதாக வீட்டிற்கு கொண்டு சென்றிருப்போம். மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்த நாங்கள் இதனை எப்படி வீட்டிற்கு எடுத்துச்செல்வது. வேறு வழியில்லாமல் வாடகைக்கு வாகனங்களை வைத்து கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : countryside , Country side chicken,vilupuram,cages ,chicken
× RELATED அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று...