×

காற்று வெளியிடை படத்தில் நடிகர் கார்த்திக்கு பயிற்சியளித்தவர் ஏர்மார்ஷல் அபிநந்தனின் தந்தை

சென்னை: மணிரத்னம்  இயக்கிய ‘காற்று வெளியிடை படத்தின் ஆலோசகராக  இருந்தவர் ஏர்  மார்ஷல் வர்தமான். இவர், பாகிஸ்தான் படையிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் தந்தை.காற்று  வெளியிடை படத்தில் விமானப்படை விமானியாக கார்த்தி நடித்திருந்தார். இந்த வேடத்துக்காகவும் படத்தின் சில முக்கிய காட்சிகளுக்காகவும் ஓய்வுபெற்ற ஏர்மார்ஷல் வர்தமான் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த படத்தில் கார்த்தி கடத்தப்படுவார். அதேபோன்ற சம்பவம் படத்துக்கு பயிற்சி கொடுத்த வர்தமானின் குடும்பத்தில்  அரங்கேறியிருப்பது அவர்கள் யாரும் கனவில்  கூட நினைத்து பார்த்திருக்க  மாட்டார்கள். காற்று  வெளியிடை படத்தின்  நாயகன் கார்த்தி கார்கில் போரின்போது தவறுதலாக  பாகிஸ்தான் பகுதிக்குள்  போய் சிக்கிக்கொள்வார்.

அவரை பாகிஸ்தான் படையினர்  சிறை பிடித்து சித்ரவதை  செய்வார்கள். இந்தப் படத்திற்கு இந்த காட்சிகளுக்கு ஆலோசகராக  செயல்பட்டவர்தான் வர்தமான். இன்று இதேபோல இவரது  மகனுக்கும்  நடந்திருக்கிறது.காற்று வெளியிடை படத்தில் நடித்த கார்த்தி கூறும்போது, ‘விங் கமாண்டர் அபிநந்தனின்  தந்தைதான் படத்துக்காக எனக்கு பயிற்சி அளித்தவர். அவருடனும் மேலும் சில  வீரர்களுடனும் பழக வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம்.  பிடிபட்டிருக்கும் அவர் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என  பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthi ,Arsharash Abhinanthan , father , Abhinantha, trained ,actor Karthi,air publishing
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...