×

பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. வனப்பகுதியில் பட்டா இல்லாத 11.8 லட்சம் பழங்குடியினரை வெளியேற்ற கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே மத்திய அரசின் மனுவை ஏற்று தனது உத்தரவை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்திவைத்துள்ளது.

வழக்கின் பின்னணி

வனஉரிமை சட்டம் என்று அழைக்கப்படும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாழ் மக்கள் சட்டத்தை 2006ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்தது. அதில் 2005ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பிலிருந்து வனப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்த நிலங்களை பட்டாவாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த சட்டத்தை அமல் படுத்தினால் மிகப்பெரிய அளவில் காடுகள் அழிப்பு நடைபெறும் என்று வைல்டுலைப் பர்ஸ்ட் என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

பழங்குடியினரை வெளியேற்ற உத்தரவு


எனவே சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், சட்டத்தை அமல்படுத்தியிருந்தால் பட்டா இல்லாமல் வசிக்கும் பழங்குடியின மக்களை வனப்பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த பிப்.13ம் தேதி விசாரித்தது. அப்போது இந்தியாவில் உள்ள 16 மாநிலங்கள் தாக்கல் செய்த அறிக்கையில் ஒட்டுமொத்தமாக 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டா நிராகரிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு மனு தாக்கல்

இதனிடையே உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,வனப்பகுதியுடன் தொடர்புடைய பழங்குடியினரை திடீரென வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது; பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவை பல்வேறு மாநில அரசுகள் எதிர்க்கின்றன;என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்

இந்நிலையில் இன்று மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு,பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. அத்துடன் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , Supreme Court, Tribes, Patta, Forest
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...