சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை

சென்னை : சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்த நிலையில், இன்று காலை சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,  ஆவடி, அம்பத்தூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்தது.  

மேலும் எழும்பூர், சென்ட்ரல் , திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், மீனம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அயனாவரம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், போரூர், ராமாபுரம், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும்  இந்த ஆண்டில் பெய்த முதல் மழை இது என்பது குறிப்பிடத்தக்கது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னை புறநகர் பகுதிகளில் இலவச...