×

முதுமலையில் காட்டுத்தீ போராடி அணைப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 23ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் கர்நாடகா எல்லை வரை பரவியது.  இதனை கட்டுப்படுத்த முதுமலை புலிகள் காப்ப மற்றும் கர்நாடக வனத்துறையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் சென்பகப்பிரியா கூறுகையில், `பந்திப்பூர் அருகே பிடித்த காட்டு தீயால் 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்தது. எனினும் நேற்று முன்தினம் இரவு தீ முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது’ என்றார்.

இதையடுத்து கடந்த 3 நாளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சூழல் சுற்றுலா மீண்டும் நேற்று துவங்கியது. மாயாறு நீர்வீழ்ச்சி, சிறியூர் கோயில், பொக்காபுரம் விபூதி மலை ஆகிய இடங்களுக்கான ஜீப் சவாரி நேற்று முதல் துவங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wildfire fighting ,Mudumalai , Mermaid, wildfire, hug
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...