×

முதுமலை பகுதியில் சாலையில் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய யானையால் பரபரப்பு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலையில் சுற்றுலா வாகனத்தை யானை ஒன்று துரத்தும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்டு யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக சாலையை கடந்து மலையேற்றத்தை சென்று வருகின்றன. அதேபோல் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் கூட்டம், கூட்டமாக சாலையோரத்தில் ஆக்ரோஷத்துடன் யானைகள் காணப்படுகின்றன.

முதுமலை வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சுற்றுலா பயணிகள் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல ஏற்கனவே வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் முதுமலை நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலையோரத்தில் குட்டிகளோடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த தாய் யானையானது வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்தியது. நல்வாய்ப்பாக யானை முன்பு ஒரு மரம் சாய்ந்து கிடந்ததால் வேகமாக ஓடிவந்த யானை, வாகனத்தின் மீது உள்ள கோபத்தை, கடும் ஆவேசத்துடன் குறுக்கே கிடந்த மரத்தை தாக்கியது.

வாகனத்தை ஓட்டுநர் முன்னோக்கி இயக்கியதால் தப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் கோபத்துடன் யானைகள் நடமாடுவதால் வனப்பகுதியில் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post முதுமலை பகுதியில் சாலையில் சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய யானையால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Nilgiris ,Kudalur ,Mudumalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள...