×

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து விஜயகாந்த்-ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாகரிகம்

கன்னியாகுமரி,: `தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் தொடர்பாக  விசாரித்து உள்ளார். இது, அரசியல் நாகரிகம் ஆகும்’ என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி வருகிற 1ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். பா.ஜ. ஆட்சியில்  தந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல புதிய திட்டங்களை அறிவித்தும் அவர் உரையாற்ற  உள்ளார். அரசு நிகழ்ச்சியை தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.  

பிரதமர் மோடி வருகை தரும் சமயத்தில் கருப்பு கொடி காட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வைகோவுக்கும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்து உள்ளேன். காங்கிரஸ் கட்சியினரும் கருப்பு கொடி காட்ட மாட்டார்கள் என எண்ணுகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசியதை கொச்சைப்படுத்த மாட்டேன். உடல் நலம் தொடர்பாக  மு.க.ஸ்டாலின் விசாரித்து உள்ளார். அரசியல் நாகரிகம் என்பது மிகவும் முக்கியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnarathakrishnan ,Vijayakanth-Stalin ,meeting , Ponnarathirakaran, Vijayakanth-Stalin, political civilization
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...