×

இறக்குமதிக்கு தடை விதிப்பு எதிரொலி பருப்பு விலை கிடு கிடு உயர்வு : கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரிப்பு

சென்னை: மத்திய அரசு இறக்குமதிக்கு விதித்துள்ள தடையால் பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. அதேபோல, விளைச்சல் பாதிப்பால் அரிசி விலையும் உயர தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கு தான்சானியா, மாளவியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பர்மாவில் இருந்து உளுத்தம் பருப்பு, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து வெள்ளை கடலை, கருப்பு கடலை, பச்சை பட்டாணி, பட்டாணி பருப்பு போன்றவை  இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், பருப்புகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். விவசாயிகளை திருப்திப்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இறக்குமதிக்கு விதித்துள்ள தடையால் தற்போது பருப்பு வகைகளின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. துவரம் பருப்பு ரூ.80லிருந்து ரூ.90, உளுத்தம் பருப்பு ரூ.70லிருந்து ரூ.80, பாசிப்பருப்பு ரூ.80லிருந்து ரூ.90, பட்டாணி பருப்பு ரூ.50லிருந்து ரூ.60, வெள்ளை பட்டாணி ரூ.50லிருந்து ரூ.60, பச்சை பட்டாணி ரூ.66லிருந்து ரூ.75 ஆக கடுமையாக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அரிசி விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. ‘கோ 51’ ரக அரிசி ரூ.26லிருந்து ரூ.28, ‘ஐ.ஆர்.39’ ரூ.28லிருந்து ரூ.30, ஏடிபி45 ரூ.30லிருந்து ரூ.32, டீலக்ஸ் பொன்னி ரூ.32லிருந்து ரூ.34, பிபிடி(பழையது) ரூ.46லிருந்து ரூ.48, பிபிடி(புதுசு) ரூ.38லிருந்து ரூ.40, இட்லி அரிசி (முதல் ரகம்) ரூ.28லிருந்து ரூ.30, இட்லி அரிசி (2ம் ரகம்) ரூ.26லிருந்து ரூ.28, புழுங்கல் அரிசி (நொய்) ரூ.24லிருந்து ரூ.26, 2ம் ரகம் புழுங்கல் அரிசி (நொய்) ரூ.20லிருந்து ரூ.22. பொங்கல் பச்சரிசி ரூ.44லிருந்து ரூ.46, பொங்கல் பச்சரிசி (2ம் ரகம்) ரூ.36லிருந்து ரூ.38, மாவு பச்சரிசி ரூ.26லிருந்து ரூ.28, சோனா பொன்னி (பழையது) 52லிருந்து ரூ.54, சோனா பொன்னி (புதுசு) ரூ.48லிருந்து ரூ.50, கர்நாடகா அரிசி ரூ.44லிருந்து ரூ.46, கர்நாடகா அரிசி (2ம் ரகம்) ரூ.38லிருந்து ரூ.40, ஆந்திரா அரிசி ரூ.36லிருந்து ரூ.40, ஆந்திரா அரிசி (2ம் ரகம்) ரூ.34லிருந்து ரூ.36 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பாசுமதி அரிசி விலையும் உயர்ந்துள்ளது. பாசுமதி அரிசி (முதல் ரகம்) ரூ.90லிருந்து ரூ.100, பாசுமதி (2ம் ரகம்) ரூ.70லிருந்து ரூ.80, பாசுமதி (3ம் ரகம்) ரூ.50லிருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகரிப்பால் குண்டு மிளகாய் 200லிருந்து ரூ.120, குண்டுமிளகாய் (புதுசு) ரூ.150லிருந்து ரூ.80, நீட்டு மிளகாய் ரூ.140லிருந்து ரூ.100, நாட்டுப்பூண்டு ரூ.100லிருந்து ரூ.60, நாட்டுப்பூண்டு (2ம் ரகம்) ரூ.60லிருந்து 30, ஊட்டி மலைப்பூண்டு ரூ.140லிருந்து 90, சர்க்கரை ரூ.40லிருந்து ரூ.35 ஆக குறைந்துள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘வரும் நாட்களில் பருப்பு, அரிசி வகைகள் விலை குறைய வாய்ப்பில்லை. மாறாக விலை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது. கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயரக்கூடும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ban imposed on eighth, price Increase up to Rs
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை;...