×

உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடம்...1, 2-வது இடத்தில் ஸ்பெயின், இத்தாலி

சென்னை: உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடத்தில் உள்ளது. உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்திலும்,  இந்தியா 120வது இடத்திலும் உள்ளது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உலகின் ஆரோக்கியம் மிகுந்த நாடுகள் பட்டியலை BLOOMBERG என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெயின் நாடு முதலிடத்திலும்,இத்தாலி 2-வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஐஸ்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு  உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 119-வது இடத்தில் இருந்தது.

தற்போது ஒரு இடம் பின்தங்கி 120-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 52-வது இடத்திலும், இலங்கை 66-வது இடத்திலும், பாகிஸ்தான் 124-வது இடத்திலும் உள்ளது. மேலும் ஒரு நபரின் ஆரோக்கியத்துக்காக அமெரிக்கா அதிகளவில் பணம் செலவிடுவதாகவும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒரு நபரின் ஆரோக்கியத்துக்காக அமெரிக்கா செலவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,countries ,world ,Spain ,Italy , List of healthy countries in the world, Spain, Italy
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...