×

பாமக, பாஜ ஒரே அணியில் சேர்ந்தது எப்படி? அதிமுகவின் இரண்டு அமைச்சர்களே கூட்டணி கட்சிகளை தீர்மானித்தனர்: திரைமறைவில் நடந்த பரபரப்பு தகவல்கள்

சென்னை: பாமக, பாஜவுடன் கூட்டணியை இறுதி செய்ததில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய 2 பேர் தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. எந்தெந்த தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையும் முடிந்து, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு கூட்டணிகளும் இணைவதற்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்தான் காரணமாக இருந்ததாக அதிமுக முன்னணி தலைவர்களே கூறுகிறார்கள்.இதுகுறித்து அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தற்போது தமிழக அமைச்சரவையில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்தான் முக்கிய இலாகாவை கவனித்து வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய பொறுப்பும், அமைச்சர் தங்கமணி மின்சாரத்துறை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறையை கவனித்து வருகின்றனர். இந்த துறைகளில் தான் அதிகளவில் பணம் புரளும்.

இப்போதுகூட பாமகவுக்கு 7 சீட் மற்றும் ராஜ்யசபாவில் ஒரு சீட் என 8 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வெறும் சீட் மட்டும் அல்லாமல் தேர்தல் செலவையும் அதிமுக பார்த்து கொள்ளும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செலவை அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஏற்பதாக உறுதி அளித்துள்ளதால்தான் கூட்டணியே உருவானது. அதேபோன்று அதிமுகவில் மேலும் சில கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றன. அவர்களுக்கு சீட் ஒதுக்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. தேர்தல் செலவுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு ஆகாததால்தான் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இழுபறியில் உள்ளது. இதையும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேசி முடித்து விட்டால், கூட்டணியும் உடனடியாக உறுதி செய்யப்பட்டு விடும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், முக்கிய இலாகாவை வைத்துள்ள தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஓகே என்று சொன்னால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்தளவுக்கு அவர்களின் செல்வாக்கு அதிமுகவில் உயர்ந்துள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடியும் முழு சுதந்திரம் அளித்துள்ளதுடன், ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pamaga ,Bhaj ,team ,Ministers ,coalition parties ,High Commission , PMK, BJP
× RELATED ராமதாஸ் வலியுறுத்தல் மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக்க வேண்டும்