×

போரூர் தனியார் கார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை, தடவியல்துறை ஆய்வு

சென்னை: சென்னையை அடுத்த போரூரில் தனியார் குடோனில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 200 கார்கள் தீயில் எரிந்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் கமிஷனர் தினகரன் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் கார் குடோனில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. கார் குடோனின் அருகாமையில் இருந்த குப்பைக்கிடங்கில் தீப்பற்றி, பின்னர் அது கார் குடோனிற்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் கார் குடோனின் காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்தன. முதலில் 3 கார்களில் பற்றிய தீ மளமளவென மற்ற கார்களுக்கு பரவ தொடங்கியதில் சுமார் 184 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் கார்கள் எரியும் பகுதியை சுற்றி பெருமளவில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை நேற்று பார்வையிட்ட அம்பத்தூர் கூடுதல் இணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று காலை சுமார் 10மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் கமிஷனர் தினகரன், மற்றும் அண்ணா நகர் ஜாயிண்ட் கமிஷனர் விஜயகுமாரி, அம்பத்தூர் இணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீ விபத்து காரணமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பெங்களூரு விமானப் படைத்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், தற்போது சென்னையில் அதேபோன்ற தீவிபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspectorate Inspectorate ,fire accident ,Porur , Porur,fire accident,car chutney,threshold analysis
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...