×

ஆணைய அதிகாரத்தை நீர்க்கச்செய்யும் என சர்ச்சை புதிய கண்காணிப்பு குழுவால் மருந்து விலை குறையுமா?

புதுடெல்லி: மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் பல அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டிலேயே இந்த ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. கடந்த 2017ம் ஆண்டுதான் திடீரென அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதன் பலனாக, ஸ்டென்ட் விலை குறைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்படும் ஸ்டென்ட்களில் குறைந்த பட்ச விலை ரூ7.660 ஆக குறைந்தது. ஸ்டென்ட் விலை குறைத்தாலும் மருத்துவமனைகள் பலவற்றில் சிகிச்சை கட்டணம் முன்பிருந்த அளவே வசூலிக்கப்பட்டது. இருப்பினும், ஸ்டென்ட் விலை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பல  அதிரடியாக குறைக்கப்பட்டதற்கு மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அதிகாரம்  உள்ளது என்பதை இவை நிரூபித்தன. இருந்தாலும், 750 மருந்து வகைகளுக்கு மட்டுமே இந்த ஆணையம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது எனவும், 80 சதவீத மருந்துகள் இன்னும் விலை கட்டுப்பாட்டுக்குள் வரவே இல்லை என கூறப்படுகிறது.

ஆனாலும், இந்த ஆணையம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அளவுக்கு மீறிய அதிகாரத்துடன் செயல்படுகிறது என மருந்து நிறுவனங்கள் குற்றம் சாட்டின. விலை நிர்ணய விவகாரத்தில் ரசாயனம், உரத்துறை அமைச்சகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நல அமைச்சகம் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த மாதம் மருந்து விைல கட்டுப்பாட்டுக்கான புதிய உயர்மட்ட குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த குழு நியமனத்தால் மருந்து விலை நிர்ணய ஆணைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதன் அதிகாரம் நீர்த்துப்போக செய்து விட்டது எனவும், புதிய குழு மக்களுக்கும் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இன்றி நடு நிலையுடன் செயல்படும்  கூறப்படுகிறது. அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் துறைகளில் ஒன்றாக மருந்து துறை உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் இந்த துறையின் பங்களிப்பு அதிகம். எனவே நிறுவனங்களுக்கு சாதகமான முடிவாகவே இந்த குழு நியமனத்தை கருத வேண்டியுள்ளது. மருந்து விலை நிர்ணய ஆணையமே 80 சதவீத மருந்துகளை கட்டுப்படுத்தாத நிலையில், புதிய குழு மருந்து விலையை குறைக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : surveillance team , Commission authority, new monitoring team, medicine
× RELATED தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.1.58 கோடி பறிமுதல்