×

இயக்குனர் கவுதமன் புதிய கட்சி தொடக்கம்

சென்னை: தமிழில் ‘கனவே கலையாதே, ‘மகிழ்ச்சி ஆகிய படங்களை இயக்கி, ‘மகிழ்ச்சி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கவுதமன். தற்போது அவர், தமிழ்ப் பேரரசு கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது கவுதமன் கூறியதாவது: அரசியல் என்ற ஆயுதத்தை வைத்து, நமது உரிமைகள் அனைத்தையும் மத்திய, மாநில ஆளும் சக்திகள் ஈவிரக்கமின்றி வேர் அறுக்கின்றன. எனவே, அதே அரசியல் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து நமது உரிமைகளை மீட்டெடுக்க மக்களின் ஆதரவுடன் மாணவர்களும், இளைஞர்களும் சேர்ந்து, தமிழ்ப் பேரரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளோம்.நாடாளுமன்ற தேர்தல் குறித்த நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.  புதிய கொடியை உருவாக்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gauthaman ,party , Director Gouthman, a new party
× RELATED கோடைகால சரும வறட்சியை போக்கும் வெள்ளரி!