×

இலங்கையுடன் ஒருநாள் தொடர் தென் ஆப்ரிக்க அணியில் என்ஜிடி

கேப் டவுன்: இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணியில் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி என்ஜிடி சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையும் அந்த அணிக்கு சொந்தமானது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இந்த தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகப் பந்துவீச்சாளர் லுங்கி என்ஜிடி முழு உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), குவின்டான் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ஆண்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹிர், வான் டெர் டுசென். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NGT ,series ,South Africa , One day, South Africa, Sri Lanka,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு