×

மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிப்பு

பனாஜி: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணைய பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வரும் மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும், அமெரிக்காவிலும் சில மாதங்களுக்கு முன் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடல் வால்வு பரிசோதனைக்காக இரவு 10 மணியளவில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே கூறுகையில்,”டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிக்கரை கண்காணித்த மருத்துவர் குழு கோவா வந்து அவரை பரிசோதிக்க இருக்கிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்று வரை அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்திகளை பரப்ப வேண்டாம். அதற்கு பதிலாக அவர் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manohar Parrikar , Manohar Parrikar,
× RELATED கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த...