×

எடப்பாடி அரசை காப்பாற்றவே பாஜவுடன் உறவு : அன்வர்ராஜா எம்பி பேட்டி

பரமக்குடி:  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேல முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா எழுதிய, ‘முத்தலாக் மசோதா உரிமைமீறல் செயல்’ என்ற புத்தகத்தின் விளக்கக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் அன்வர்ராஜா அளித்த பேட்டி: முத்தலாக் மசோதாவை எப்போது கொண்டு வந்தாலும் அத்தனை முறையும் அதிமுக எதிர்க்கும். பாஜவுடனான கூட்டணி தேர்தலுக்காக ஏற்படும் கூட்டணி. இந்த கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல. எடப்பாடி அரசை காப்பாற்றிக்கொள்வதற்காக ஏற்படுத்தியுள்ள கூட்டணி. வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 18 தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதால்  கூட்டணியை அமைத்துள்ளோம் ’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Edappadi ,interview , Ramanathapuram, MB Anwaraja, relationship with Bhaj
× RELATED இடைத்தேர்தலை சந்திக்க அதிமுகவுக்கு தைரியம் இல்லை: கே.பாலகிருஷ்ணன் பேட்டி