×

காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் அறிவியல் ஆய்வு கூடம் : முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ₹4.67 கோடி செலவில் அறிவியல் மையத்திற்கான ஆய்வு கூடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தை ஒட்டியுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்  ₹84 லட்சத்து 70 ஆயிரம் செலவிலும், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் ₹84 லட்சத்து 70 ஆயிரம் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு விடுதி கட்டிடங்கள்,

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் ₹1 கோடியே 74 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல்  மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தில் ₹4 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் மையத்திற்கான ஆய்வுக்கூடம் மற்றும் கூடுதல்  வகுப்பறைகள், மாணவ, மாணவிகளுக்கான விடுதியின் இரண்டாம் தள கட்டிடம் என மொத்தம் ₹10 கோடியே 91 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதிகள், கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : science lab ,Chief Minister ,Melakottaiyur ,Kanchipuram district , Science lab, Chief Minister Edappadi
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...