×

கூட்டணி அமைக்க விரும்பினால் கெஜ்ரிவால் என்னிடம் பேச வேண்டும் : ஷீலா தீட்சித் ஆவேசம்

புதுடெல்லி: கூட்டணிக்கு முயன்று சோர்வடைந்து உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள தகவலை டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் கடுமையாக மறுத்து உள்ளார். டெல்லி ஜும்மா மசூதி அருகே புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘மக்களவை தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி சார்பில் காங்கிரஸுடன் பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் பலனில்லை. அதனால் சோர்வடைந்து உள்ளோம். கூட்டணி அமைந்தால், பாஜவின் தோல்வி டெல்லியின் 7 தொகுதியிலும் உறுதி செய்யப்படும். இல்லை என்றால் வாக்குகள் சிதறி பாஜவுக்கு வெற்றி வாய்ப்பு அமையக்கூடும்’’, எனக் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த உரைக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தக்க பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் மக்களவை தேர்தலுக்காக டெல்லி தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் ஷீலா தீட்சித் தலைமையில் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவால் பேசிய உரை குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்து ஷீலா தீட்சித் கூறியிருப்பதாவது:
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க விரும்பி, ஆம் ஆத்மி கட்சி எப்போது எங்களிடம் வந்தது? கூட்டணியை விரும்பினால், கெஜ்ரிவால் நேரடியாக என்னிடம் பேசியிருக்க வேண்டும். சோர்வடைந்து உள்ளோம் எனக்கூறும் கெஜ்ரிவால் எப்போது என்னிடம் பேசினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எந்த அடிப்படையில் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் இவ்வாறு முழங்கினார்? என  கேள்வி எழுப்ப விரும்புகிறேன். கூட்டணி குறித்து ஒரு முறை கூட அவர்  எங்களுடன் பேசியது இல்லை. நாங்களும் அவருடன் பேசவில்லை என திட்டவட்டமாக  கூறுகிறேன். இவ்வாறு ஷீலா தீட்சித் ஆவேசம் தெரிவித்து உள்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,Kejriwal ,Sheila Dikshit , Alliance, Kejriwal, Sheila Dikshit
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...