×

3 வாலிபர்களுடன் தகாத உறவா? என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் சவால்

சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளை அபி சரவணன் ஆதாரங்களுடன் நிரூபிக்க  முடியுமா என கேள்வி கேட்டிருக்கிறார் நடிகை அதிதி மேனன். ‘பட்டதாரி  படத்தில் அபி சரவணன், அதிதி மேனன் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல்  மலர்ந்தது. பின்னர் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது அதிதி மேனன் அளித்த புகாரில், ‘போலி திருமண  சான்றிதழை காட்டி அபி சரவணன் என்னை மிரட்டுகிறார்’ என தெரிவித்தார்.  இதுபற்றி அபி சரவணன் கூறும்போது, ‘நாங்கள் திருமணம் செய்துகொண்டு 3 வருடம்  சேர்ந்து வாழ்ந்தோம். திருமணத்துக்கு பிறகு 2 பேருடன் அதிதி மேனனுக்கு  தொடர்பு இருந்தது. திருமணத்துக்கு பிறகு சுஜின் என்பவருடன் கள்ளத்தொடர்பு  வைத்திருந்தார்’ என பகீர் குற்றச்சாட்டு கூறினார்.

இதுகுறித்து அதிதி மேனன் கூறியது:
நானும்  அபிசரவணனும் பட்டதாரி படத்தில் ஜோடியாக நடித்தோம். அப்போது நாங்கள் காதலித்தோம். அபி சரவணனின் குடும்பத்தினர், எங்களின்  காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால், என்னுடைய குடும்பத்தினருக்கு ஆட்சேபணை  இருந்தது. பட்டதாரி படத்துக்கு பிறகு நான் சில படங்களில் நடித்தேன்.  அப்போதுதான் அபி சரவணனுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவரின்  சில நடவடிக்கைகள் என்னை பெரிதும் பாதித்தது. மனஉளைச்சலுக்கு ஆளானேன். கடந்த நவம்பர் மாதம் எங்கள் காதல் முறிந்தது. அதன்பிறகு அபிசரவணன் என்னைப் பற்றி தவறான தகவல்களை  பரப்பி வந்தார். அதையெல்லாம் சகித்துக்கொண்டேன். இந்த சமயத்தில்தான் நான்  ஓடிப்போய்விட்டதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், நான் சென்னையில்தான்  இருந்தேன். அந்த செய்தி தொடர்பாக அபி சரவணனிடம் போனில் பேசினேன். அப்போது  அவர் அந்த செய்திக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.

இதையடுத்து தான் என்னுடன் அவருக்கு திருமணம் நடந்ததாக  போலி திருமண சான்றிதழ் வெளியிட்டார். எனக்கும் அவருக்கும் திருமணம்  நடக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், அந்த போலி சான்றிதழில் ஒரு  சங்கத்தில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது சுத்த பொய். மேலும், நானும் அபி சரவணனும் சேர்ந்து  இருக்கும் போட்டோக்கள் பட்டதாரி படத்துக்காக எடுத்தவை. அதை காட்டி இந்த பதிவு சான்றிதழை அவர்  பெற்றுள்ளார். இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில்   நிலுவையில் உள்ளது. என்னுடைய டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து,  அதிலிருந்தும் என்னுடைய புகைப்படங்களை திருட்டுத்தனமாக அபி சரவணன் எடுத்து  வெளியிட்டுள்ளார். இது பற்றியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளேன்.

போலீசார் விசாரித்து வருகின்றனர். நான் புகார்  கொடுத்தபிறகு அவர் மீடியாவிடம் என்னைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார். இதை  வைத்துப் பார்க்கும்போதே அபி சரவணனுக்கு பயம் வந்துவிட்டது தெரிகிறது. நான்  ஆதாரங்களுடன்தான் புகார் கொடுத்துள்ளேன். எனக்கும் அபிசரவணனுக்கும்  திருமணம் நடந்திருந்தால் நான் விவாகரத்து கேட்டிருப்பேனே. நண்பர்களாக  இருப்போம் என்றுதான் பிரிந்தோம். நான் சொல்வதுதான் உண்மை. உண்மை  வெற்றிபெறும். என் மீது அபிசரவணன் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன்  அவர் நிரூபிக்கட்டும். அதற்குப் பிறகு அதுபற்றி பதில் சொல்கிறேன். இவ்வாறு அதிதி மேனன்  கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : actress ,Aditya Menon ,Abhi Saravanan , Abhi Saravanan, actress Aditya Menon
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!