×

தெருவிளக்கு வசதிக்காக சிறுநீரகத்தையும் விற்பேன் : எஸ்டிஎம்சி கவுன்சிலர் நூதன போராட்டம்

புதுடெல்லி: அய்யா நகரில் தெருவிளக்கு வசதியை ஏற்படுத்துவதற்கு தேவையான நிதியை திறட்ட, தனது சிறுநீரகத்தையும் விற்பதாக அந்த வார்டு கவுன்சிலர், பாஜ ஆளும் தெற்கு மாநகராட்சி மேயருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு(எஸ்டிஎம்சி) உட்பட்ட பகுதி அய்யா நகர். இது குருகிராம் எல்லை பகுதியை ஒட்டி உள்ளது. இதன் வார்டு கவுன்சிலராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேத் பால் உள்ளார். இவரது தொகுதிக்கு உட்பட்ட சாலைகளில் தெருவிளக்கு வசதி இல்லை.

இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இரவு நேரங்களில் சாலைகள் இருண்டு கிடப்பதால், அவ்வழியே நடந்து செல்லும் பெண்களை பலர் கிண்டலடித்து ,ேகலி செய்வது வாடிக்கையாக இருந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு கருதி சாலைகளில் தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வார்டு நிதியில், சாலைகளில் தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் நடந்து வந்தது. ஆனால் திடீரென இப்பணிகளை நிறுத்தும்படி எஸ்டிஎம்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதனால் வளர்ச்சி பணி நிறுத்தப்பட்டது.
எனினும் தெருவிளக்கு வசதி கோரி மக்கள் தொடர் புகார் தெரிவித்ததால், சமீபத்தில் எஸ்டிஎம்சி மேயருக்கு வேத் பால் கடிதம் எழுதியிருந்தார். அதில், தெருவிளக்கு வசதி இல்லாததால், பெண்கள் பலர் இரவு நேரங்களில் ஈவ்டீசிங் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்கிறது. மேலும் இங்குள்ள கால்வாய்களும் மோசமான நிலையில் உள்ளன.

எனது வார்டு மீது மேயர் கவனம் செலுத்த வேண்டும். தெருவிளக்கு அமைப்பதற்கென எனது சிறுநீரகத்தை விற்று போதிய கிடைக்க ஏற்பாடு செய்வதோடு, அதனை வாங்க விரும்பும் நபர் பற்றிய விவரமும் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வேத் பால் கூறுகையில், தெருவிளக்கு பிரச்னை குறித்து பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனது வார்டு மீது கவனம் செலுத்தவும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்துவதற்கான நிதி திறட்ட எனது சிறுநீரகத்தையும் தருவதாக கூறியுள்ளேன். எனது வார்டு மீது மாநகராட்சி கவனம் செலுத்ததால் இந்த நூதன முயற்சியில் இறங்கியுள்ளேன்’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Street lighting, councilor's university struggle, kidney
× RELATED டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தை...