×

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் முகிலனை கண்டுபிடிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் முகிலனை கண்டுபிடித்து மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் சூழலியல் பாதிப்புகளை வெளிகொணர பாடுபட்டவர்களில் ஒருவருமான முகிலனை காணவில்லை என்ற செய்தி பத்திரிகை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பல நாட்களாக செய்திகள் வருகின்றன.

அவரது உயிர் பற்றிய அச்சம் குறித்து கருத்துகளும் வெளியாகிறது. அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், நாட்டை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளை வெளிட்டு வருகின்றார். காணாமல் போன அவரை கண்டுபிடித்து மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite ,opponent ,Muthrasan , Sterlite protagonist Mullen, Muthrasan
× RELATED ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. 6ம்...