×

நிலம் ஆக்கிரமிப்பு வனத்துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் : மாநில அரசு நடவடிக்கை

புதுடெல்லி: சத்தார்பூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து தடுக்க தவறிய 2  வனத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் இம்ரான் ஹுசேன் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநில சுற்றுசூழல் அமைச்சராக இருக்கும் இம்ரான் ஹுசேன் சமீபத்தில் சத்தார்பூர் என்கிளேவ் பார்ட்-2ல் உள்ள வனப்பகுதியை ஆய்வு செய்தார். அவருடன் உள்ளூர் எம்எல்ஏ கர்தர் சிங் தன்வார், முதன்மை பாதுகாப்பாளர், டெல்லி மற்றும் பிற சுற்றுசூழல் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர். வனத்துறைக்கு உட்பட்ட நிலங்களை ஆய்வு செய்தபோது, பல இடங்களில் வரப்புகளை மீறி வனத்துறை பகுதிகளை ஆக்கிரமித்து தனியார் நபர்கள் கட்டடங்களை எழுப்பியிருந்தனர். புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க ரேஞ்சர் அதிகாரிகளை ஏற்படுத்தியிருந்தும், அதனை கண்டுகொள்ளாது ஆக்ரமிப்புக்கு உதவியாக இருந்ததை ஹேசேன் கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக ஆக்மரிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து புல்டோசர் உள்ளிட்ட வாகனங்கள் உதவியுடன், ஆக்ரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
இந்த இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் இரு ரேஞ்சர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்ட ஜெயின், ஆக்ரமிப்பாளர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும், உடனடியாக வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கவும் வனத்துறை முதன்மை பாதுகாப்பாளருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து ஹுசேன் கூறியதாவது: சுத்தம் மற்றும் தூய்மான காற்றை நகர வாசிகள் சுவாசிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் சில ஆசாமிகள் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து கொண்டு, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சூழலுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது’ என்றார். இந்த ஆய்வு பற்றி முதல்வர் கெஜ்ரிவால் டிவிட்டில் கூறுகையில், ‘ஒவ்வொரு துறையிலும் உள்ள மாப்பியாக்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மாப்பியாக்கள் பாஜ மற்றும் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது டெல்லிக்கு நேர்மயான அரசு கிடைத்துள்ளது. இந்த மாப்பியாக்களை வௌியேற்றும் முயற்சியில் அரசு ஈடுபடும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Occupation Forest Officers Officers , 2 Occupation, Forest Officers, Officer Suspended
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...