×

டெல்லி-காஜியாபாத்-மீரட்டை இணைக்கும் 30,274 கோடி சாலை திட்டத்திற்கு அனுமதி

புதுடெல்லி : தேசிய தலைநகரை மீரட் நகருடன் காஜியாபாத் வழியாக இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் எனப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து திட்டத்துக்காக மத்திய அரசு 30,274 கோடிக்கு அனுமதி தந்துள்ளது. டெல்லியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருடன் காஜியாபாத் வழியாக இணைக்கும் வகையில் விரைவு போக்குவரத்து சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் நீளம் 82 கிலோ மீட்டராகும். இதை 1 மணி நேரத்தில் விரைவாக கடந்து விடலாம். ஆர்ஆர்டிஎஸ் என்பது ரயில் அடிப்படையிலான அதிவிரைவு பிராந்திய போக்குவரத்து முறையாகும். இந்தியாவில் முதல் முறையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்துக்கு டெல்லி ஆம் ஆத்மி அரசு அதன் பங்களிப்பை தராமல் இழுத்தடிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கடந்த 2006ம் ஆண்டு முடிவான திட்டம் இன்னும் உருபெறவில்லை. இந்நிலையில் ஆர்ஆர்டிஎஸ்  திட்டத்துக்கு ₹ 30,274 கோடியை ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆர்ஆர்டிஎஸ் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இந்த திட்டத்தின் தொலைவு 82.15 கிலோ மீட்டராகும்.  

இதில் 68.03 கிலோ மீட்டர் உயரடுக்கு முறையிலும், 14.12 கிலோ மீட்டர் தரைக்கு அடியிலும் இருக்கும். திட்ட மதிப்பீடு 30,274 கோடியாகும்’’ என்றார். ஆர் ஆர் டிஎஸ் முறையில் மாசு இருக்காது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். இதனால் பொருளாதார, சமுகம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.  ஆர் ஆர் டிஎஸ் போக்குவரத்தில் விமான, ரயில்வே, மெட்ரோ, ஐஎஸ்பிடி பேருந்துகள் ஒருங்கிணைக்கப்படும். டெல்லி- குருகிராம்-ஆல்வார், டெல்லி-பானிபட் தடம், டெல்லி-காஜியாபாத்-மீரட் ஆர்ஆர்டிஎஸ் ஆகிய மூன்றும் திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் டெல்லி -காஜியாபாத்-மீரட் ஆர்ஆர்டிஎஸ் நடைமுறைபடுத்தப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meerut ,Delhi-Ghaziabad , Allocation for Delhi-Ghaziabad-Meerut ,road link ,Rs 30,274 crore
× RELATED பிரதமர் மோடி பேச்சு 10 ஆண்டு பாஜ ஆட்சி...